அத்தியாயம் 19

Nilaprakash

Administrator
Staff member
அத்தியாயம் 20

பயத்தில் யாழினி சத்தமிட தன் மனதிற்கு பிடித்தவளுடன் தான் இருக்கும் நெருக்கம் நெஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்க அர்ஜுன் உற்சாகத்தில் கத்தினான்.வளைந்து நெளிந்து சில சமயம் மூடிய குழாய்களுக்குள் அந்த ஏர் ஃபோர்டு பயணிக்க

“ஐயோ கடவுளே ! உசிரோட வெளியே போவோமா “

அவள் முருகா முருகா என மந்திரம் ஓத அர்ஜுன் கேலியாக சிரித்தான். சில நிமிடங்களில் அந்த ஏர் ஃபோர்டு கீழிறிருந்த தண்ணீர் தொட்டியில் சீறிக் கொண்டு விழ கார்ட்ஸ் வருமுன் தன்னவளை ஆசையோடு கட்டித் தூக்கி நிறுத்தினான் அர்ஜுன்.அது ரொம்ப சவாலான விளையாட்டு என்பதால் அங்கே வெகு சிலர் தான் படிகளில் ஏறிக் கொண்டு இருந்தனர் அதிலும் அலுவலக ஊழியர்கள் எவரும் இல்லாது இருந்தனர்.

தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டிய அவளது ஆடைகள் அவனது இளமையை சீண்ட பார்வையில் கண்ணியத்தைக் காக்க முடியாது திணறினான் அர்ஜுன்.அவனது பார்வைகள் படும் இடத்தைக் கண்டு அவனை முறைத்து அவனது கைகளைத் தட்டி விட்டு நடந்தாள் யாழினி.

“தடிமாடு …பஞ்சு மிட்டாய் பார்த்த பச்சை குழந்தையை மாதிரி பார்வையைப் பாரு “

அவள் முனகியது அவனுக்கு கேட்டிருக்க வேண்டும் .

“ஏ சண்டக்கோழி பஞ்சு மிட்டாய் இல்ல… வேணும்னா பஞ்சு தலைகாணி னு வெச்சுக்கலாம் நல்லா மெதுமெது னு “

அவனது வார்த்தைகளின் கண்ணியம் குறைய அவனை ஓடி வந்து அடிக்க நினைத்து தவறி விழுந்தவளைத் தாங்கி பிடித்து நிறுத்தி சொன்னான் அர்ஜுன்.

“ஏன்னே தெரியல சண்டக்கோழி உன்கிட்ட வம்பிழுத்து சிரிக்கிறது உயிர் பிரிய வரைக்கும் வேணும் னு தோணுது “

சற்றுமுன் அவன் பேசிய வரம்பு மீறிய வார்த்தைகள் எதுவும் நினைவில்லாது அந்த மயக்கக் குரலில் மகுடிக்கு ஆடும் பாம்பு போல் ஆகும் தன் மனதை என்னவென்று சொல்ல எனப் பேச்சற்று நின்றாள் பாவை.

“அர்ஜுன் உன் தாத்தா லைன் ல சம்திங் இம்பார்ட்டன்ட் “

விக்டர் ஓடி வந்து சைகை செய்ய அவளை அப்படியே தூக்கி வந்து மேல் சிமெண்ட் தரையில் நிறுத்தியவன் அவளைப் பார்த்து கண்ணடித்துச் சென்றான்.

யாழினி திணறித் தான் போனாள் .அந்த சனி ஞாயிறு யாழினி தனது வீட்டிற்கு செல்ல சந்திரன் அவளிடம் பேசினார்.

“அம்மு மா ..இன்னும் ஒன் மன்த் ல கான்ட்ராக்ட் முடியுது ..ரிசைன் பண்றீயா ?”

“ஆமா பா ..ஏன் கேட்கறீங்க ?”

“நத்திங் என் ப்ரண்ட் கம்பனி ல ரெக்ரூட் பண்றாங்க உன்னை பத்தி விசாரிச்சாங்க ..உங்க கம்பனியோட டை அப் பண்ணிருக்காங்களாமே ..சன்டே இன்டஸ்ட்ரீஸ் னு “

“ஓ ஆமா பா ..சின்ன கம்பனி தான் பட் நல்லா வருவாங்க “

“அவன் பையன் செந்தில் ..நல்லா படிச்சு இருக்கான் அப்பா கம்பனிய பார்க்கறான்..என்னனு தெரியலை அம்மு டூ மன்த் ஆ உன்னை பெண் கேட்டு வரேன்கறான் …இன்னைக்கு ..”

அவர் சொல்கையிலேயே வாசலில் ஹார்ன் சத்தம் கேட்க அவரது நண்பர் தண்டபாணி தன் குடும்பத்தினருடன் இறங்கினார்.

யாழினி தன் தந்தையை கேள்வியாக நோக்க ..

“இல்ல அம்மு நான் வரச் சொலல்ல “

அவர் சொல்கையிலேயே தண்டபாணி உள்நுழைந்து சொன்னார்.

“என்ன யாரையும் காணோம் “

“வா தண்டபாணி என்ன திடீர் னு “

“பையனுக்கு இந்த பக்கம் ஒரு வேலை பக்கத்தில இருக்கிற முருகன் கோயிலுக்கு சம்சாரம் போகனும் போகனும் டு கிடந்தா .அதான் அப்படியே போய்ட்டு உன்னையும் பார்த்துடலாம் னு வந்தேன் …”

“என்னமா லதா …நல்லா இருக்கியா …”

“வாங்க னா ..எப்படி இருக்கீங்க இது “

“என் பையன் செந்தில் மா எம் பி ஏ முடிச்சுட்டு என் கூட தான் பிஸினஸ் பண்றான் “

“திலகம் கா நல்லா இருக்கீங்களா ?”

“நல்லா இருக்கேன் லதா .மிதுன் என்ன பண்றான் ?”

“பிஸ்ஜி ல பயோடெக் பண்றான் கா “

இரு குடும்பங்களும் பரஸ்பரம் பேசி முடிக்க செந்திலின் பார்வை குறுகுறுப்புடனே யாழினியிடம் பதிந்து பதிந்து மீண்டது.

இறுதியாக இரு குடும்பத்தையும் யாழினி தன் செல்ஃபோனில் செல்ஃபி எடுத்து அனுப்பியே ஆக வேண்டும் என தண்டபாணி கேட்க அதை ஏன் என்று புரியாது சந்திரன் முழித்தார். யாழினி வேறு வழியின்றி அதை செய்தும் தொலைத்தாள்.

“யாழினி அப்பா இதெல்லாம் “

“எனக்கு தெரியும் பா …நீங்க இப்படி பண்ண மாட்டீங்க னு …”

“பையனைப் பத்தி எல்லாம் விசாரிச்சுட்டேன் ..உனக்கு இஷ்டம் னா “

“பா ஐ நீட் சம் டைம் பா …”

“ஓ கே டா ..நான் சொல்லிடறேன்”

அவர் சொல்லி விட்டு செல்ல யாழினி பெருமூச்செறிந்தாள் அப்பாவிடம் வெகு நாள் பொய் சொல்ல இயலாது .. சொல்லி விடலாமா எனக்கு அர்ஜுன் தான் பிடிச்சிருக்குனு …அவள் யோசனையில் ஆழ்ந்தாள்.

அதற்கு அடுத்த வாரம் கம்பனியின் ஃபோர்டு டைரக்டர்கள் மீட்டிங் ல் சாந்தமூர்த்தியின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கு நடவடிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட மூர்த்தி ஆவேசமாக பேசத் தொடங்கினார்.அர்ஜுன் கதிர் இருவரும் ஆதாரங்களைக் கொண்டு அத்தனை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேறு வழியின்றி அவர் பொறுப்பைத் துறந்து வெளியேறினார்.

இரு வாரங்கள் கழித்து வெற்றி மாறன் இந்த வெற்றியையும் அவர்களது புது தொழிலின் ஒரு வருட நிறைவு வெற்றி விழாவையும் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார்.அர்ஜுன் கதிர் இருவருமே சம அளவில் சாதித்து இருந்ததால் சவாலில் யார் ஜெயித்தார்கள் என்பதை வெற்றிமாறனின் இறுதி முடிவே தீர்மானிப்பதாக இருந்தது.

விழா நெருங்கும் சமயத்தில் யாழினி க்கு தடிமாடு என்ற பெயரில் பார்சல் வர ஆர்வமாக அதைப் பிரித்தாள் யாழினி. அர்ஜுன் வெண்பட்டு நிறத்தில் மிக அழகிய புடவையைப் பார்சலில் அனுப்பி அதில் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி இருந்தான்.

“என் செல்ல சண்டக்கோழி ..நீ இந்த புடவையில் எப்படி இருப்ப னு நான் ஆயிரம் முறை கற்பனை பண்ணிருப்பேன் ..இல்லாமலும் கற்பனை பண்ணிருக்கேன்…இப்ப பெருசா கண்ணை உருட்டி முறைக்கிறீயே இதைக் கூட தான் ..நிஜத்திலும் இதை எல்லாம் நான் பார்த்துட்டே இருக்கனும் சண்டக்கோழி ..உன் மனசில நான் இருக்கேன் னு எனக்கு தெரியும் ..இந்த புடவையில உன்னைப் பார்த்து அதை உன் சம்மதம் னு எடுத்துக்கறேன் …ஐ லவ் யூ சண்டக்கோழி .. இப்படிக்கு உன் செல்ல தடிமாடு “

யாழினி யின் கண்களில் கண்ணீர் வழிந்தது.இப்ப தான் ஐ லவ் யூ சொல்றான் தடிமாடு …

அன்றைய விழாவிற்கு யாழினி அவன் தந்த வெண்பட்டு ஆடையில் உள்நுழைய கலைவாணி தான் அவளை முதலில் பார்த்தார்‌.இதை அவர் அர்ஜுனின் அறையில் பார்த்ததாக நினைவு வர சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார்‌.

யாழினி வெள்ளை மலரெனக் காண்போர் அனைவரின் கண்களிலும் ரசனையை வரவழைத்து இருந்தாள். ஃப்ரெஞ்ச் ப்ளாட்ல் பின்னலிட்ட கேசம் சிங்கிள் ஃபீல்ட் ல் அந்த வெண்பட்டு நிற சேலை மெலிதான ஒப்பனை தாமரை நிற உதட்டு சாயம் என அர்ஜுன் கற்பனைக்கு குறையாது தன் அழகு இருக்க மெனக்கெட்டு இருந்தாள்.

யாழினி யின் கண்கள் அர்ஜுனைத் துழாவ கலைவாணி அவளைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.

“நீ தான் யாழினி யா ? நான் யாரு னு தெரியுமா ?”

“தெரியுங்க இளமாறன் சார் ஃவொய்ப் “

“ம் அதோட அர்ஜுன் சார் அம்மா “

சார் என்ற வார்த்தையில் அவரின் அழுத்தம் அவளை திகிலடையச் செய்தது.

“இங்க பாரு யாழினி நீ பயப்படற மாதிரி நான் ஸ்டேட்டஸ் பார்க்கிறவ இல்ல …எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…என் ரெண்டு பசங்க ல யாராவது ஒருத்தன் உன்னை பிடிச்சிருக்கு னு சொன்னானா நானே கல்யாணத்தைப் பேசி முடிச்சிருப்பேன்.. பிரச்சினை என்னனா ரெண்டு பேரும் உன்னை பிடிச்சிருக்கு னு சொல்றது தான்…என் பசங்கள் ல ஒருத்தனுக்கு வலியையும் ஒருத்தனுக்கு சந்தோசத்தையும் என்னால தர முடியாது “

யாழினிக்கு தன் தந்தையிடம் பேசியது நினைவு வர அமைதியாக நின்றிருந்தாள்.கலைவாணி தொடர்ந்தார்.

“இது பெருசாக வேண்டாம் தான் நானே உனக்கு ஒரு நல்ல மாப்ள செலக்ட் பண்ணி உங்க அப்பாகிட்ட பேச வைச்சேன் ..உன் கல்யாணம் தான் என் ரெண்டு பசங்களயும் சேர்த்து வைக்கும் னு தான் இவ்வளவு வேலை செஞ்சேன் …ப்ளீஸ் யாழினி என் பசங்கள பிரிச்சுராதே..அவனுக தான் என் உசிரே …”

யாழினிக்கு தன் தந்தையின் குரல் கேட்டது .”ஏன்னே தெரியலை அம்மூ டூ மன்த் ஆ …”

“எனக்கு உங்க ரெண்டு பசங்க மேலயும் காதல் இல்ல வீணா எனக்கு கல்யாணம் பண்ற வேலையை நீங்க செய்ய வேண்டாம்”

அவள் வறண்ட குரலில் சொல்லி விட்டு நடக்க கலைவாணி குற்ற உணர்ச்சியில் நின்றிருந்தார்.அர்ஜுன் விருந்தினர் கூட்டம் குறைய குறைய யாழினியை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கதிர் யாழினியிடம் தன் தாய் நடந்துக் கொண்ட விதம் பற்றி முழுமதி மூலம் அறிந்து அவளைத் தேடிக் கொண்டு வந்தான்.

அர்ஜுன் தான் சொன்ன உடையில் யாழினியைக் கண்டு மகிழ்ச்சியில் கண்கள் மின்ன விருந்தினர்களை பேசிக் கொண்டே யாழினியிடம் நெருங்கினான்.

அர்ஜுனைக் கண்டதும் யாழினி கடினப் பட்டு புன்னகைக்க யாரும் அறியாத வண்ணம் அவளை அவன் அறைக்கு இழுத்துச் சென்றான் அர்ஜுன்.

“ஏ சண்டக்கோழி …”

அவன் அணைக்க வரவும் அவள் விலகி நிற்க இதை முற்றிலும் எதிர்பார்க்காதவனாக முகத்தில் கேள்வியுடன் நின்றான் அர்ஜுன்.

“என்னாச்சு …”

“எனக்கு உங்க மேல லவ் எல்லாம் இல்ல “

“வாட் …?”

“இல்ல ப்ராங்க் பண்ணலாம் னு தான் இதை போட்டுட்டு வந்தேன் …எனக்கு எங்க அப்பா மாப்ள பாத்துட்டார்”

“எதாவது லாஜிக் ஓட பேசுடி..என் ரூம் ல நான் வாங்கி கொடுத்த சேலையைக் கட்டிட்டு நின்னுட்டு என்னை பிடிக்காம வந்தேன் கற “

அவன் கேலியாக கேட்க யாழினியின் உள்ளம் வலித்தது ..உன் அம்மாகிட்ட தான் லாஜிக் கேட்கனும்டா தடிமாடு அவளுக்கு அழலாம் என்றிருந்தது ஆனால் அந்த தாயின் கெஞ்சல் முகம் முழுவதும் இறுக்கம் காட்டி தன் கையில் இருந்த செல்ஃபோனில் இருந்த செல்ஃபி ஐ காட்டினாள் யாழினி.

“என் அப்பாவை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்…எங்க அப்பாவோட ப்ரண்ட் பையன் என் அப்பா என்கிட்ட கேட்ட ஃபர்ஸ்ட் விஸ் ..அதான்”

அவள் மேன்மேலும் பொய்களாக அடுக்க அர்ஜுன் தொப் என அந்த இருக்கையில் விழுந்து தன் முகத்தை கரங்களால் மூடிக் கொண்டான்.

“அழுகிறானா இவன்…”

யாழினி அவன் அருகில் செல்ல அவளை இடையோடு அணைத்து அவளது வயிற்றில் தன் முகம் புதைத்து இருந்தான் அர்ஜுன். தன் சேலை நனைவதைக் கண்டுத் திடுக்கிட்டு அவனை நோக்கினாள் யாழினி.

“நீயும் என் அம்மா மாதிரியே அவனுக்காக என்னை விட்டுட்டு போயிராதடி …உன் மேல எனக்கு தான் உரிமை இருக்கு “

வெளியே இவ்வளவு வீராப்பு பேசி சண்டை போடும் இவன் இப்படி ஒரு குழந்தையா அவள் அவனை அணைத்து கொஞ்சி ஆறுதல் படுத்த நினைத்த தன் கரங்களைக் கடினப் பட்டு அவனை விலக்கப் பயன்படுத்தி தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வரத் திரும்பினாள்.

“போடி போ …உன்னை மாதிரி பொண்ணுங்களால தான் மனசை ஒருத்தனுக்கும் உடம்பை ஒருத்தனுக்கும் ஈஸியா தர முடியுமே “

அர்ஜுன் கோபத்தில் வார்த்தைகளைத் துப்பினான். அவள் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க அவளது வீட்டிற்கு சென்று அன்றே ராஜினாமா கடிதம் மெயில் செய்தாள்.

அர்ஜுனின் அந்த அழுகை அவளை மட்டும் அல்ல வெளியே அவனிடம் பேச எத்தனித்து வந்த கலைவாணி கதிர் இருவரின் செவிகளிலும் விழுந்திருந்தது. தன் மகனுக்கு இப்படி ஒரு வலியை தான் கொடுக்க நினைக்கவில்லையே என அந்த தாயின் மனம் கலங்க அவரது கால்கள் நிலைத் தடுமாறியது.கதிர் அவரது கரங்களைப் பிடித்து அவரது அறைக்கு அழைத்துச் சென்றான்.

“கதிரு இவன் என்னை …அந்த புள்ள…”

“நீங்க பண்ணது தப்பில்லை மா எனக்கு ஆனா அவனுக்கு ..இப்ப யாழினி விசயத்தை எடுத்துக்குங்க எனக்காக அவன் விரும்பற… அவனை விரும்பற.. பொண்ணை விட்டுக் கொடுக்க சொல்றது தப்பு தானே மா …”

“ஏன்டா கதிரு .. உனக்கு மட்டும் .. இப்படி எல்லாம் நடக்குது “

தன் தாயின் கேள்வி வலியைக் கொடுத்தாலும் அவரது மடியில் குழந்தை எனப் படுத்துக் கொண்டு பேசினான் கதிர்.

“உனக்கு என்னைப் பிடிக்குமா மா “

“இது என்ன கேள்வி டா .. ரொம்ப ரொம்ப பிடிக்கும்”

“எனக்கு என் அம்மா போனாலும் அதைவிட எனக்கு புடிச்ச அம்மா நீ கெடைச்ச இல்லையா மா?”

” கடவுள் ஒரு விஷயத்தை கொடுக்கலைன்னா அதை விட சிறப்பா பெரிசா இன்னொரு விஷயம் தான் தரப்போகிறார் என்று அர்த்தம் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் நீ வேணா யோசிச்சு பாரு”

கலைவாணி அவன் தலையை கோதியப்படி அமர்ந்திருக்க கதிருக்கு அது மிகுந்த ஆறுதலாக இருந்தது தன் தாயின் மடியில் படுத்து கொண்டே உறங்கி போனான். கலைவாணி தன் இரு மகன்களுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டி கொண்டாள்‌.

அர்ஜுன் வெறுப்புடன் அமர்ந்திருக்க கலைவாணி தன் தவறுகளை விக்டர் மூலமாக சரிசெய்ய முயற்சித்து இருந்தார்.விக்டர் யாழினி யின் திருமண பேச்சு பொய் என்பதை ரியா மூலம் அறிந்து அர்ஜுனுக்கு தெரியப்படுத்த அர்ஜுன் தன் சண்டக்கோழியிடம் நாளை சண்டை போடலாம் என நிம்மதியாக உறங்கிப் போனான்.


வெற்றிமாறன் மறுநாள் தன் இரு பேரன்களையும் அழைத்தார். அவர்களிடம் தன் கம்பெனியின் ஃசேர்சை இரண்டாக பிரித்து இருவர் பெயரிலும் எழுதி அவர்களிடம் கொடுத்தார். தான் இன்றில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தனக்குப்பின் எம்டி பொறுப்பு மணிமாறனுக்கு கொடுப்பதாக கூறி புன்னகைத்தார்.

அர்ஜுன் தயக்கத்துடனே அவரருகில் நின்றான் அவருக்கு புரிந்து போனது.

” அந்த பொண்ணு தானே நீ அந்த முடிவு எடுத்தால் கம்பெனி தலைமை பொறுப்புக்கு நான் கதிருக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் பரவாயில்லையா ?”என்றார் அர்ஜுன் நொடி கூட தயங்காமல் உடனே தலையசைத்தான்.

அன்று மாலை யாழினியின் வீட்டில் கதிரும் கலைவாணியும் அமர்ந்து இருந்தனர்.

“அங்கிள் எங்க அம்மா பண்ணது தப்பு தான் மன்னிச்சிருங்க “

“ச்சே ச்சே என்ன கதிர் இது “

“என் தம்பிக்கு யாழினியை பேசினா நீங்க சம்மதம் தரணும் அங்கிள்”

“கதிர் இது என் பொண்ணோட வாழ்க்கை உன்னை வளர்ப்பிலேயே உங்க குடும்பம் எவ்வளவு நல்ல குடும்பம் னு தெரியுது ஆனா இது முழுக்க முழுக்க என் பொண்ணோட முடிவு “

உள்ளே இருந்த யாழினிக்கு அவர்களின் பேச்சு தெளிவாக கேட்டது . இருப்பினும் அவர்களுக்கு இடையில் வர இஷ்டமில்லாது அமர்ந்து இருந்தாள்.
கலைவாணி உரிமையோடு அவளது அறைக்குள் நுழைய அவரை வெளியே வந்து பார்க்காத குற்ற உணர்ச்சியில் அவர் காலில் விழுந்தாள் யாழினி. அவளைத் தூக்கி நிறுத்தி உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தார் கலைவாணி.

“என் ராஜாத்தி …நல்லா இருடா ..என் பையனை ரொம்ப நாள் காக்க வைக்காதே டா.‌அவன் ஒரு முரட்டு தடிமாடு”

அவர் சொல்லவும் யாழினி சிரிப்பை அடக்க வெகு பாடு பட்டாள்.

மறுநாள் அர்ஜுன் ஒரு பெரிய மலர் கொத்தோடு யாழினியை பார்க்க கிளம்பி கொண்டிருந்தான். கதிர் அவனை வழிமறித்து

“அவள நல்லா பாத்துக்கோ எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து விடாதே கண்டிப்பா நான் அத விடமாட்டேன்” என்று எச்சரித்து விட்டு சென்றான்.

கண்கள் முழுக்க காதலுடன் அர்ஜுன் நேராக யாழினியை பார்க்க சென்றான். அவன் அவள் வீட்டுக்கு எதிரே அவளுக்காக காத்துகொண்டு இருந்தான். யாழினி அருகில் இருந்த ஒரு காபி ஷாப்பில் இருந்து வெளிவர விக்டர் அவள் பின்னால் வந்தான்.

அவன் மிகுந்த புன்னகையோடு அவளை நோக்கி மலர் கொத்தை நீட்டினான்.அவள் பின்னாடி இருந்து வந்த விக்டர் கொடுக்காதே கொடுக்காதே என்பதுபோல் கையசைத்தான். யாழினியின் கண்களில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

” நான் என்ன நீயும் உங்க அண்ணனும் ஜெயிச்சு வாங்குற வின்னிங் ட்ராபியா..? உங்களுக்கெல்லாம் என்ன திமிர் இருக்கனும்?”

அந்த மலர்க்கொத்தை வீசிவிட்டு நடந்து சென்றாள்.

விக்டர் அர்ஜுனின் கைகளை பிடித்துக் கொண்டு சாரி கேட்டான்

. “நான் சமாதானப்படுத்தலாம் நினைச்சு தாண்டா உண்மைய சொன்னேன் ஆனா அவளுக்கு அது வேறமாதிரி புரிஞ்சிடுச்சு”

விக்டர் கூறவும் அர்ஜுன் தலையில் அடித்துக் கொண்டான்.

“ஏண்டா அவளுக்கு சாதாரண விஷயமே வேற மாதிரி தான் புரியும் இந்த விஷயம் ரொம்ப சரியா வேற மாதிரி புரியுது ஏன்டா என் வாழ்க்கையோட ஆளாளுக்கு விளையாடுறீங்க ?”

என்று சொல்லிவிட்டு யாழினியை பின் தொடர்ந்து போனான்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் யாழினி வீட்டின் முன்பு ஒரு ரோஜா பூவுடன் அவளுக்காக அர்ஜுன் காத்திருக்கத் தொடங்கினான். அக்கம்பக்கத்தில் இருக்கும் அனைவரும் அர்ஜுன் யாரென்று யாழினியை பற்றி கிசுகிசுக்க தொடங்கினர்.ஒரு நாள் சந்திரனும் லதாவுமே யாழினியை கிண்டல் செய்தனர்.

“என்னமா மாப்பிள்ளை இன்னைக்கு வரலியா ?”

“அப்பா …”

அவள் கத்தவும் ஹார்ன் சத்தம் கேட்டது.

“இதோ வந்துட்டார் போல “ அவர் நமுட்டுச் சிரிப்புடன் கடந்தார். யாழினி ரோஜா பூவுடன் நின்றிருந்த அர்ஜுனை நோக்கி நடந்தாள்.

”தடிமாடு அறிவிருக்கா ..இனிமே இங்க வராதே ”

” சரி வரல நீ என் வீட்டுக்கு வந்துரு”

என்றான். அவள் கோபமாக முறைக்கவும்

” கல்யாணம் பண்ணி தான்மா கூட்டிட்டு போறேன்னு சொல்றேன் அதுக்கும் அடிக்க வராதே “.



“ பேசியே மயக்கறதுக்கு தனியா ட்ரைனிங் போய் இருக்கியா எனக்கு உன்ன பார்த்தா கோபமும் காதலும் இரண்டும் சேர்ந்தே வருது என் சுயமரியாதை யை மீறி உன்னை பார்த்ததும் கட்டிக் கொள்ள தோணுது “

அவள் குரல் குழைந்திருக்க அர்ஜுன் தன் இரு கரங்களை நீட்டி அவளை இறுக அணைத்துக் கொண்டான் .

அவள் இதழ்களில் முத்தமிட்டு அவள் காதில் சொன்னான்.

“ இதே போல் தான் உன்னை முதல் முறை பார்த்த போதில் இருந்தே எனை மீறும் காதல் உன்னை தேடியே காதலித்தது “

முற்றும்
அன்புடன்

நிலா பிரகாஷ்
 
Back
Top